உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயி நிதியுதவி பெற அடையாள எண் பெறாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

விவசாயி நிதியுதவி பெற அடையாள எண் பெறாதவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 21,771 விவசாயிகள் பிரதமர் விவசாய நிதி பெற, தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். மத்திய அரசு மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும், 2,000 ரூபாய் உதவித்தொகை பெற, தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், மத்திய, மாநில அரசின், வேளாண் சார்ந்த திட்ட பலன்களை பெற, தங்களது நில விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை தொடர்பான ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டத்தில், விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடமை விபரங்கள் விடுபாடின்றி இணைக்கும் பணி நடக்கிறது. உரிய விபரங்கள் இணைக்கப்பட்ட பின், தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் பதிவு செய்து தரப்படும். இதற்காக வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, பொது சேவை மையம் மற்றும் வருவாய் துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.வரும் அக்., மாத இறுதி அல்லது நவ., மாத துவக்கத்தில், பிரதமர் விவசாய நிதி விடுவிக்கப்பட உள்ளது. எனவே வரும் அக்., 31க்குள் தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ