மேலும் செய்திகள்
மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி
26-Dec-2024
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே குடிபோதை தகராறில், தந்தை மற்றும் மகன், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாண்டாம்பா-ளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் நாகன், 48; தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரின் மகன் பகவதி, 23; வாழை இலை வெட்டும் தொழிலாளி. இருவரும் மது குடித்து விட்டு அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்கள். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தந்தை, மகன் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளனர். இதனால் நாகன் வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது மகன் பகவதி வீட்டில் துாக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்த நாகனும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சேலம் ரயில்வே ஸ்டேஷனில்வேலுார் பெண்ணுக்கு 'குவா குவா'சேலம்: வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா, 35. இவரது மனைவி லைலா, 30. இருவரும் கேரளாவில் கூலி வேலைக்கு சென்ற நிலையில், லைலா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணி-யாக இருந்ததால், நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வேலுா-ருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார். சேலம் அருகே வந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சேலம் ஜங்ஷன், 5வது நடைமேடையில் இறங்கினார். உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்தபோது, வலியால் லைலா துடித்தார். பணியாளர்கள் பிரசவம் பார்த்ததில், ரயில்வே ஸ்டேஷ-னிலேயே பெண் குழந்தை பிறந்தது. முதலுதவிக்கு பின், ஆம்-புலன்ஸ் மூலம் லைலாவை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
26-Dec-2024