உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி

அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி

ஓசூர், அஞ்செட்டியை தொடர்ந்து, உரிகம் வனச்சரகத்தில் ஒரு பெண் யானை உயிரிழந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பனை காப்புக்காட்டில் உள்ள உச்சகான் குட்டையில் கடந்த, 27 ம் தேதி, 7 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. அச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், உரிகம் வனச்சரகத்தில் நேற்று அழுகிய நிலையில், 14 வயது மதிக்கத்தக்க பெண் யானை சடலம் மீட்கப்பட்டுள்ளது. யானை சடலம் பாதிக்கு மேல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடல்நிலை பாதித்து, இயற்கையான முறையில் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.அடுத்தடுத்து இரு பெண் யானைகள் பலியானது, விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் உரிய தகவலை அளிக்காமல் மறைக்கவே முயன்றனர். உயிரிழந்த யானையின் புகைப்படத்தை கூட வெளியிட தயக்கம் காட்டினர். யானைகள் அடுத்தடுத்து இறந்து வரும் நிலையில், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை