மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் வெள்ளம் உயர்மட்டம் பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ஓசூர்: ஓசூர் அருகே, மழைக்காலங்களில் தரைப்பாலம் மீது வெள்ளம் செல்வதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உயர்மட்ட பாலம் கட்ட, 8 ஆண்டுகளாக கேட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி அக்ர-ஹாரம் பஞ்., உட்பட்ட திப்பாளம் கிராமத்தில், ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. இப்ப-குதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, 2 கி.மீ., தொலைவில் உள்ள குமுதேப்பள்ளிக்கும், மருத்துவ சேவைக்காக ஓசூருக்கும் தான் செல்ல வேண்டும். திப்பாளம் கிராமத்திற்கு அருகே, குமுதேப்பள்ளி செல்லும் சாலையின் குறுக்கே தரைப்-பாலம் உள்ளது.மழைக்காலங்களில் திப்பாளம் ஏரி நிரம்பி, ஆர்.ஆர்., கார்டன் பகுதியிலுள்ள ஓடை வழியாக வெளியேறும் உபரி நீர், இந்த பாலத்தின் அடியில் தான் செல்லும். கனமழை பெய்தால், தரைப்-பாலம் நீரில் மூழ்கி வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால், அவசிய தேவை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு கூட, மக்களால் செல்ல முடியாது. மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த, 2017, 2022, 2023 மற்றும் நேற்று முன்தினம் என, பல-முறை தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் சென்றுள்ளது. தரைப்பாலம் மீது, தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு அபாய பள்ளம் உருவாகியுள்ளது. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்-பகுதி மக்கள் கேட்டும், இதுவரை ஓசூர் ஒன்றிய நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்கவில்லை. மழைக்காலங்களில் மட்டும் வந்து பார்த்து விட்டு அதிகாரிகள் சென்று விடுகின்றனர். அதேபோல், ஆர்.ஆர்., கார்டன் பகுதியிலும், ஓடையை துார்வாரி சுத்தம் செய்து, கரை கட்டாமல் விட்டுள்ளதால், மழைக்காலங்-களில் பாதிப்பு ஏற்படுகிறது. இனியும் காலம் கடத்தாமல், திட்ட மதிப்பீடு தயார் செய்து, பாலம் மற்றும் ஓடை கரை கட்டும் பணி-களை விரைவாக துவங்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.