உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புத்தாண்டையொட்டிபூக்கள் விலை உயர்வு

புத்தாண்டையொட்டிபூக்கள் விலை உயர்வு

புத்தாண்டையொட்டி பூக்கள் விலை உயர்வுகரூர், ஜன. 1- புத்தாண்டையொட்டி, பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ, 2,200 ரூபாய்க்கு நேற்று விற்றது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் செயல்பட்டு வரும், தினசரி பூ மார்க்கெட்டுக்கு மதுரை, திண்டுக்கல், சேலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம், 1,200 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, ஒரு கிலோ, 2,200 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ, 200 ரூபாய், 800 ரூபாய்க்கு விற்ற ஜாதி பூ, 1,000 ரூபாய், 1,000 ரூபாய்க்கு விற்ற முல்லை, 1,700 ரூபாய், 800 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம், 1,000 ரூபாய்க்கு விலை அதிகரித்து விற்பனையானது. மேலும், 250 ரூபாய்க்கு விற்ற ரோஜா, 300 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்ற மரிக்கொழுந்து, 40 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு துளசி, 50 ரூபாய்க்கு விலை போனது. கடும் பனிப்பொழிவு மற்றும் புத்தாண்டு காரணமாக, பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை