உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறை

ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறை

ஓசூர், டிச. 12-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செட்டிப்பள்ளி காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த ஒற்றை யானையால், செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி சுற்றுப்புற கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். பயிர்களை யானை நாசம் செய்து வந்தது. செட்டிப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து, சின்னக்குத்தி வனப்பகுதிக்கு யானையை வனத்துறையினர் விரட்டினர். அங்கு முகாமிட்டுள்ள யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர், சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர். யானையை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ