மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
23-Jul-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நேற்று நடத்தியது.முகாமை, ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா துவக்கி வைத்தார். இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் இருந்து, 167 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 101 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு டாக்டர் மதன் குமார், சீனியர் டாக்டர் நடேசன், தோல் டாக்டர் ராஜமயில் ஆகியோர் நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில், அரிமா சங்க கவர்னர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
23-Jul-2025