செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி பர்கூரில் இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி, பர்கூர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில், தம்பிதுரைஎம்.பி., பங்கேற்றார். கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மற்றும் பர்கூர் அரிமா சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. கல்லுாரி நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை தலைமை வகித்தார். வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் வரவேற்றார். மருத்துவ முகாமை அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுனர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லுாரி அறங்காவலர் டாக்டர். இலாசியா தம்பிதுரை, மருத்துவமனையின் சிறப்பம்பங்கள் குறித்து விளக்கினார். முகாமில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும், ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.