மேலும் செய்திகள்
வெவ்வேறு சம்பவத்தில் இளம் பெண்கள் 3 பேர் மாயம்
28-Sep-2024
காஸ் சிலிண்டர் வெடித்து வீடு, பொருட்கள் சேதம்ஓசூர், அக். 27-தேன்கனிக்கோட்டை அருகே, சாப்ரானப்பள்ளியை சேர்ந்தவர் வீரபத்திர ஆச்சாரி, 73. இவரது மனைவி நாராயணம்மா, 60. இவர்களது மகன் கிருஷ்ணாச்சாரி, 48, மருமகள் ஜோதி, 40, பேரன், பேத்திகள் அணில்குமார், 22 மற்றும் தேஜஸ்வினி, 19. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். நேற்று மாலை அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டிருந்த அறையிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, காஸ் சிலிண்டர் மீது தீப்பொறி விழுந்தது. இதில் சிலிண்டர் வெடித்து சிறியதில், வீரபத்திர ஆச்சாரியின் வீட்டின் கூரை மற்றும் வீட்டில் இருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Sep-2024