ஆடுகள் திருடியவர் கைது
ஆடுகள் திருடியவர் கைது கிருஷ்ணகிரி, அக். 27-கல்லாவி அடுத்த கருவானுாரை சேர்ந்தவர் வேடியப்பன், 40, விவசாயி. இவர் நிலத்திலுள்ள ஆட்டுக்கொட்டகையில் இருந்த, 6 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். அவர், கல்லாவி போலீசில் புகாரளித்தார். விசாரணையில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பொன்னிகானுாரை சேர்ந்த வடிவேலு, 47, மற்றும் அவரது கூட்டாளிகள், ஆடுகளை திருடியது தெரிந்தது. வடிவேலுவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.