உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்-பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்-பனை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று பொங்கலையொட்டி, 5 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று வாரச்சந்தை கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று, தர்மபுரி, திரு-வண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து 5,000க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பல மாவட்டங்களி-லிருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதி-களவு வந்திருந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 14 கிலோ எடை கொண்ட ஆடு, 12,000 ரூபாய், 18 கிலோ எடை கொண்ட ஆடு, 16,000 ரூபாய், 20 கிலோ எடை கொண்ட ஆடு, 18,000 ரூபாய் என விற்பனையானது. அதேபோல் கிராமப்புறங்களிலி-ருந்து விவசாயிகள் அதிகளவு நாட்டுக்கோழியை கொண்டு வந்தி-ருந்தனர். கிலோ, 400 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை விற்பனையானது. அதன்படி நேற்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 5 கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !