மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் முறைகளில் பணியமர்த்தி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற உரிமையினை நிலை நாட்ட வேண்டும். அரசு துறைகளை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
15-Jul-2025