உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

கிருஷ்ணகிரி, சிகரலப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 1987-88ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவர்கள், 38 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை சுற்றி பார்த்தனர். பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தாங்கள் செய்யும் தொழில், பணி குறித்து பேசி பகிர்ந்து கொண்டனர். இதில், தற்போதைய பள்ளியின் தலைமையாசிரியர் முருகன், முன்னாள் வகுப்பாசிரியர்கள் அன்பழகன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. வரும் நாட்களில், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், சுதந்திர தினம், குடியரசு தினம், காமராஜர் பிறந்த தினம் ஆகிய நாட்களில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து, பள்ளி யின் வளர்ச்சிக்காக நிரந்தர வைப்புநிதியாக, 10,000 ரூபாயை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை