உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1975ல் பிளஸ் 1 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ராணுவம், போலீஸ், தீயணைப்புத்-துறை, வனத்துறை, ஆசிரியர்கள், வக்கீல், மருத்துவத்துறை உட்-பட பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாண-வர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.அந்த கால பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி மற்றும் பேரக்குழந்தைக-ளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்களுக்கு பாடம் நடத்தி, வாழ்க்கையில் சிறக்க செய்த ஆசிரியர்கள் ரங்கசாமி, சீனிவாசன், நடராஜன், கிருஷ்ண-மூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான பச்சையப்பன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை