உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 வகுப்புகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக நியமனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களால், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. இதற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க, பல மாதங்கள் அவகாசம் தேவைப்படும். அதேபோல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பள்ளிகளில் மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் உருவானது.இதை கருத்தில் கொண்டு, பள்ளி தொடங்கும் முன், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, கடந்த, 28ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முழு கல்வி தகுதி கொண்ட ஆசிரியர்களை புகார் எழாதபடி நியமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajendrakumar Rajendrakumar
ஜூலை 02, 2025 12:00

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவது சரியாக வரவில்லை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆகிறது இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்


then mozhi
ஜூன் 06, 2025 15:56

Iam Thenmozhi ulundurpettai govt girls school ulundurpettai schoola smc pg teacher one year work panna sir enna velalaiku continue panna sollama vera teacher opoint pannitanga sir plz request me kallakurichi ulundurpet girls school 606207


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை