உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரிப்பு

அரசு பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, விலங்குகளை பாதுகாப்போம், மரங்களை வளர்ப்போம் என்ற தலைப்பில், நேற்று விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 100 மாணவ, மாணவியர், புங்கம், வேப்பம், மயில்கொன்றை, மா, பூவரசம், சீதா, எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட வகையான விதைகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை தயாரித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி பேசியதாவது: விதை, களிமண் மற்றும் மண் அல்லது எரு ஆகியவை கலந்து தயாரிப்பதே விதைப்பந்துகள். கலப்பைகள் மற்றும் பிற விவசாய உபகரணங்களை கொண்டு தரையை உழாமல், விதையிலிருந்து செடிகளை வளர்க்கும் பழைய முறையே இவை. உலகில் எங்கிருந்தும், களிமண், மண் மற்றும் விதை கிடைக்கக்கூடிய எவரும், முதலீடு இல்லாமல் விதைப் பந்துகளை உருவாக்கலாம். விதைப்பந்தின் மூலம் விலங்கினங்கள் பாதுகாக்கப்படுவதோடு, நல்ல மழையும் பெய்யும். எனவே ஆர்வம் உள்ள அனைவரும் விதைப்பந்துகளை தயாரித்து, அருகில் உள்ள இடங்களில் எறியலாம். இவ்வாறு பேசினார்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்குமார், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, உதவி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை