அரசு பள்ளி கழிவறை திறப்பு
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 34வது வார்டுக்கு உட்பட்ட முத்துராயன் ஜிபி பகுதியில் இயங்கும் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதை, மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் திறந்து வைத்தனர். மாநகராட்சி கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், கவுன்சிலர்கள் வரலட்சுமி, தேவி மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.