கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 பஞ்.,களில் கிராமசபை கூட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், “சுதந்திர தினவிழா தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 333 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், பஞ்.களில் நடக்கும் பணிகள், மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார். தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணியசுவாமி கோவில், கண்ணம்பள்ளி வெங்கட்ட ரமணசுவாமி கோவில், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில், ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம் அனுமந்தீஸ்வரர் கோவில் உள்பட, 7 கோவில்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.