பாப்பிரெட்டிப்பட்டி அரூரில் கனமழை
அரூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணி முதல் அரூர், பேதாதம்பட்டி, வாச்சாத்தி, பறையப்பட்டி, மருக்காலம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.