உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.6.50 கோடியில் உயர்மட்ட பாலம் திறப்பு

ரூ.6.50 கோடியில் உயர்மட்ட பாலம் திறப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சேவகானப்பள்ளி பஞ்., உட்பட்ட சொக்கரசனப்பள்ளி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலம் நீரில் மூழ்கி விடுவதால், சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் அவதியடைந்தனர். பல கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உருவானது. அதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை மூலம் நபார்டு திட்டத்தில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். ஓசூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, லோகேஷ்ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ