மேலும் செய்திகள்
ஆத்துார் சுங்கச்சாவடியில் மின்விளக்குகள் பழுது
08-Mar-2026
சூளகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகு-திக்கு உட்பட்ட சிகரமாகனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி, கட்டாயம்மேடு ஆகிய, 5 மலை கிராமங்-களில், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வன விலங்-குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால், உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, ராஜ்யசபா எம்.பி., இன்பது-ரையிடம், உள்ளூர் தொகுதி மேம்பாட்டுதிட்டத்தில், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்தார்.அதையேற்று, சிகரமாகனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்க-ணப்பள்ளி, கட்டாயம் மேடு ஆகிய, 5 கிராமங்களிலும் மொத்தம், 31 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்மின் கோபுர விளக்-குகள் அமைக்கப்பட்டன. அதை, இன்பதுரை எம்.பி., மற்றும் முனுசாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர். அ.தி.மு.க., வக்கீல் அணி மாநில துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Mar-2026