மேலும் செய்திகள்
சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா
24-Jan-2025
அரூர்: திருப்பரங்குன்றம் மலையை காக்க இன்று, (பிப்.4) ஆர்ப்-பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில், நேற்றும், இன்றும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்-பட்டுள்ளது.இந்நிலையில், இந்து முன்னணியின் நிர்வாகிகள் தாமு வெங்க-டேசன் உள்ளிட்டோர், மதுரைக்கு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அனுமன்தீர்த்தம், நரிப்பள்ளி, கோம்பூர், பொம்மிடி ராமமூர்த்தி நகர் ஆகிய இடங்களிலுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.அவர்கள் இந்து முன்னணி பிரமுகர்கள் யாராவது மதுரைக்கு செல்கிறார்களா என, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும், தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை, அரூர் போலீஸ் ஸ்டேஷனில் முகாமிட்-டிருந்தார்.
24-Jan-2025