உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 32,000 கன அடியாக உயர்ந்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன.இதையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்தது.இதனால், அங்குள்ள, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை மீது, தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை