மேலும் செய்திகள்
வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
17-May-2025
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு, 25 மி.மீ., கனமழை பெய்தது.இதில், தளி அடுத்த மதகொண்டப்பள்ளி திருநீர்த்தி பாப்பார தெரு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில், நேற்று அதிகாலை, 2:10 மணிக்கு, அப்பகுதியில் இருந்த அரசமரம் சாய்ந்து, ரமேஷ் என்பவரது வீட்டின் சிமென்ட் சீட் கூரை சேதமானது. ரமேஷ் அவரது மனைவி, தாய் மற்றும் 3 குழந்தைகள் என, 8 பேர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், வீடு சேதமாகி உள்-ளதால், ரமேஷ் குடும்பத்தினர் வீடு இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற, மா.கம்யூ., கட்சி தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா, அப்பகுதி கிளை செயலாளர் முருகேஷ் ஆகியோர், சேதமான வீட்டை பார்வையிட்டு, அரசு உடனடியாக ரமேஷிற்கு புதிய வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தினர்.
17-May-2025