உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி உண்ணாவிரதம்

நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி உண்ணாவிரதம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற-வியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள நீதிமன்றங்கள் கடந்த, 17 ஆண்டுக-ளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதிகளுமின்றி செயல்படுகின்றன. இதனால் மக்கள், போலீசார், அலுவலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீதிமன்றம் கட்ட தேர்வு செய்த இடத்தில், கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைவாக நீதிமன்ற கட்-டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வக்கீல்கள் கடந்த, 3ம் தேதி முதல், 7ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் கோர்ட் பணியை புறக்கணித்து, சார்பு நீதிமன்றம் முன், வக்-கீல்கள் சங்க தலைவர் கோபி தலைமையில், 60க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உண்ணா-விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோர்ட் பணிகள் முடங்கியன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி