கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்அழைத்து செல்ல வந்த கணவர் மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலனுடன் வசித்த மனைவியை அழைக்க சென்ற கணவர், மகன் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இது குறித்து வாலிபர் மீது வழக்குப்பதிந்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் சின்னசேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,52; விவசாயி. இவரது மனைவி பாரதி, 40. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த இளம்பரிதி,42, என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. 15 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாரதி மாயமானார். அவர், தன் கள்ளக்காதலன் இளம்பரிதியுடன் சென்றது தெரிந்தது. இதுபற்றி பள்ளிக்கொண்டா போலீசில் வேல்முருகன் புகார் அளித்தார். இந்நிலையில், பாரதி, இளம்பரிதியுடன் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட சத்திரபதி சிவாஜி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிந்தது. இதையறிந்த வேல்முருகன் மற்றும் அவரது மகன் நேற்று முன்தினம் பாரதி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர். பாரதியிடம், நடந்ததை மறந்து தன்னுடன் வருமாறு வேல்முருகன் அழைத்துள்ளார்.அப்போது அங்கு வந்த இளம்பரிதி,'எங்களை இங்கும் நிம்மதியாக வாழ விடமாட்டீர்களா' எனக் கேட்டு, வேல்முருகன் அவரது மகனை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்கள் அளித்த புகார்படி மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.