உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மஹால் பர்கூர் அருகே திறப்பு விழா

ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மஹால் பர்கூர் அருகே திறப்பு விழா

ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மஹால்பர்கூர் அருகே திறப்பு விழாகிருஷ்ணகிரி, நவ. 15-கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த எமக்கல்நத்தம் காந்தி நகரில் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மஹால் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை முன்னிலை வகித்தார்.விழாவிற்கு வந்தவர்களை முன்னாள் எம்.பி.,யும், ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மஹால் உரிமையாளருமான பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி புதிய திருமண மண்டபத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பேசியதாவது:கடந்த, 52 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர் முன்னாள் எம்.பி., பெருமாள். அவருக்கு பல்வேறு பதவிகளை எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா வழங்கி அழகு பார்த்தனர். அ.தி.மு.க., ஒரு குடும்பம் என்பதற்கு இந்த விழா ஒரு சாட்சி. அ.தி.மு.க.,வுக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை போல, இங்கு கொடுக்கப்பட்ட வரவேற்பானது, வரும், 2026ல், அ.தி.மு.க., ஆட்சி மலரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் வீரமணி, மாவட்ட, அ.தி.மு.க.. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ, தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை