உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இந்திய அரசியலமைப்பு தினவிழா விழிப்புணர்வு

இந்திய அரசியலமைப்பு தினவிழா விழிப்புணர்வு

இந்திய அரசியலமைப்பு தினவிழா விழிப்புணர்வுதர்மபுரி, நவ. 27-நேரு யுவகேந்திரா மற்றும் தர்மபுரி அரசு சட்டக்கல்லுாரி இணைந்து, இந்திய அரசியலமைப்பு தினவிழாவை, சட்டக்கல்லுாரியில் நேற்று கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் சிவதாஸ் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட லோக் அதாலத் நீதிபதி ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா திட்ட அலுவலர் அப்துல்காதர் பேசினார். மூத்த சிவில் நீதிபதி ஆயுஷ் பேகம், உதவி சட்ட உதவி எதிர்காப்பு வக்கீல் சுபஸ்ரீ உட்பட பலர் அரசியலமைப்பு தினவிழா குறித்து, விரிவான கருத்துக்கள் வழங்கினர். தொடர்ந்து, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அடுத்ததாக, இந்திய அரசியலமைப்பு தினவிழா விழிப்புணர்வு, பாத யாத்திரை பேரணி நடந்தது. நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் தொண்டர் சுகன்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை