உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாகம்மன் கோவிலில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை

நாகம்மன் கோவிலில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சென்னை சாலை, வெள்ளக்குட்டை நாகம்மன் நகரில் அமைந்துள்ள நாகம்மன் கோவிலில், பஞ்சலோக சிலை பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 8:00 மணிக்கு, பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். 10:30 மணிக்கு, அம்மன் மூல மந்திர ஹோமம், அம்மன் ஊஞ்சல் உற்சவமும், உற்சவ நாகம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து, நாகம்மன் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்து, மஹா கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நாகம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை