உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் சர்வதேச முதியோர் தினம்

கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் சர்வதேச முதியோர் தினம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சர்வதேச முதியோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆண்டுதோறும் அக்., 1ல் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சர்வதேச முதியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கும். கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், முதியோர் மருத்துவ பயனாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் சத்யபாமா தலைமை வகித்து பேசினார்.இதில், முதியவர்களுக்கான மருத்துவ பயன்கள், உடல் நலமில்லாதபோது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென, விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு நோட்டீசை பணியாளர்கள் வழங்கினர். மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கல்லுாரி துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !