உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு அழைப்பு

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அனீஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்ந்து கொள்ளலாம். தமிழ் வழிக்கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும். கல்வி கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய் கட்ட வேண்டும். பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம், உரக்கடை, பூச்சி மருந்து கடை, விதைக் கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் தொடர்புக்கு முதன்மை அலுவலர், தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர் முனைவர் கோவிந்தன், 99422 79190, 73390 02390, உதவியாளர், சுரேகா 95007 71299 மற்றும் இயக்குனர், திறந்த வெளி மற்றும் தொலை துாரக்கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641 003, ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் லட்சுமி, 0422-6611229 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை