உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு

85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 85,000 பேருக்கு பட்டா வழங்க வரும், தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, அலைகடலென திரண்டு வாருங்கள்' என, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்-துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், தமிழ்புதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என்று எண்-ணற்ற திட்டங்களை தந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.கடந்த, 4 ஆண்டு கால ஆட்சியில், எண்ணற்ற திட்டங்கள் தந்த முதல்வர் ஸ்டாலினை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் வரவேற்கிறேன். 85,000 பேருக்கு பட்டாக்கள், நல உத-விகள் வழங்கி, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடி-வுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்க உள்ளார். கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து, ராயக்கோட்டை மேம்-பாலம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஆர்.சி., பெண்கள் பள்ளி, ஐந்துரோடு, சென்னை சாலை வழி-யாக, விழா மேடைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆங்-காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்-பான வரவேற்பு அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் அலைகடலென திரண்டு வழி-நெடுகிலும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை