மேலும் செய்திகள்
6வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 155 மனுக்கள்
28-May-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில், 196 பேருக்கு, 49.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, பர்கூர், ஓசூர், ஊத்தங்கரை, அஞ்செட்டி ஆகிய, 8 தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு ஜமாபந்தி கடந்த, 16ல், துவங்கியது. கிருஷ்ணகிரி தாலுகாவிற்குட்பட்ட வேப்பனஹள்ளி, ஆலப்பட்டி, குருபரப்பள்ளி, பெரியமுத்துார், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி உள்வட்டங்களுக்குட்பட்ட, 133 கிராமங்களுக்கு ஜமாபந்தி கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் கடந்த, 16 முதல் நேற்று வரை நடந்தது.கிருஷ்ணகிரியில் நடந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், பட்டா ரத்து செய்ய கோருதல், நில அளவை சர்வே செய்தல், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 1,291 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அவற்றில், 196 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், 196 பயனாளிகளுக்கு, 49.58 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நில அளவை உதவி இயக்குனர் ராஜ்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் குருநாதன், தாசில்தார் சின்னசாமி, தனி தாசில்தார்கள் இளங்கோ, மகேஸ்வரி, வடிவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
28-May-2025