உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலில் நகை திருட்டு

கோவிலில் நகை திருட்டு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த கொள்ரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் காம்பவுன்ட் சுவர் கேட்டின் பூட்டு உடைந்துள்ளதை கண்டார். ஊர்கவுண்டர் திருப்பதிக்கு தகவல் அளித்தார். அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மனுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய, 2 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் இரு உண்டியல்களை உடைத்து, காணிக்கை திருடு ‍போனது தெரிந்தது. கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை