உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜூஜூவாடி அரசு பள்ளிக்கு பசுமை முதன்மையாளர் விருது

ஜூஜூவாடி அரசு பள்ளிக்கு பசுமை முதன்மையாளர் விருது

ஓசூர்: ஓசூர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 2,250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் பசுமையை பாதுகாக்கும் வகையில், இப்பள்ளி வளாகத்தில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தலைமையா-சிரியர் நர்மதாதேவி மற்றும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்-பாளர் ஆசிரியை ஸ்வர்ணா தலைமையில், மாணவ, மாணவியர் பசுமை பூங்காவை பராம-ரித்து வருகின்றனர். மாவட்டத்திலேயே சிறந்த பசுமை பள்ளி-யாக ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்-டுள்ளது.கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர விழாவில், இப்பள்ளிக்கு பசுமை முதன்மையாளர் விருதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் வழங்கினார். அதனுடன், பள்ளி வளர்ச்சி பணிக்காக, ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. அதை, தலைமையாசிரியர் நர்மதாதேவி, ஆசிரியை ஸ்வர்ணா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களான கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், அசோகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை