கர்நாடகா மதுபானம் கடத்தல் மளிகைக்கடை ஓனர் கைது
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, 18,755 ரூபாய் மதிப்புள்ள, 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 3,120 ரூபாய் மதிப்புள்ள, கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்-தன.இதனால், காரை ஓட்டி வந்த, உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் அருகே தொட்டமெட்டரையை சேர்ந்த மளிகைக்கடை நடத்தி வரும் சந்தோஷ், 31, என்பவரிடம் விசாரித்த போது, கர்நாட-காவில் இருந்து கடத்தி வருவது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.