மேலும் செய்திகள்
கர்நாடகா மதுபானம்,புகையிலை கடத்தியவர் கைது
04-May-2025
ஓசூர், ஓசூர் அருகே கர்நாடகா எல்லையில், 1 கோடி மதிப்பிலான கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கர்பூர் கிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கடந்த, 45 நாட்களுக்கு முன், வாலிபர்கள் நான்கு பேர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதியில் உள்ள செக்யூரிட்டியை பார்த்து, போலீசார் என நினைத்து, முதல் மாடியில் இருந்து, 4 வாலிபர்களும் கீழே குதித்தனர். 3 பேர் தப்பியோடிய நிலையில், ஒருவருக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பொதுமக்களிடம் சிக்கினார். ஆனைக்கல் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, கேரள மாநிலத்தை சேர்ந்த சச்சின், 28, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, தாங்கள் வசிக்கும் வீட்டில் பதுக்கி வைத்து, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அண்டை மாநிலமான தமிழகத்தின் எல்லையில் உள்ள ஓசூர் சுற்றுப்புற பகுதியில் விற்பனை செய்தது தெரிந்தது.இதனால், சச்சினை கைது செய்த போலீசார், வாலிபர்கள் குடியிருந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு அறையில் இருந்த பெரிய மூட்டையில் பதுக்கி வைத்திருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 169 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், 800 கிராம் அளவிலான மேலும் சில போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த சச்சினை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள கேரளாவை சேர்ந்த ராஷி, சஞ்சு, உமேத் ஆகிய, 3 பேரை, ஆனைக்கல் போலீசார் தேடி வருகின்றனர்.
04-May-2025