உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு

கி.கிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓசூர், தளி சாலையிலுள்ள சென்னீஸ் மகாலில் இன்று (அக்., 15) காலை, 10:00 மணிக்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர மேயர் சத்யா முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தல் குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதியில் சிலை வைப்பது தொடர்பாகவும், கட்சி ஆக்கப்பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள், நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை