உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிட்டம்பட்டி வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா

கிட்டம்பட்டி வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள கிட்டம்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்-டாசி, 3ம் சனிக்கிழமையையொட்டி நேற்று தேர்த்திருவிழா நடந்-தது. காலையில், வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக, ஆராத-னைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வர-தராஜ பெருமாள் உற்சவர், கருட வாகனத்தில் அமர்த்தி திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டது. கிட்டம்பட்டி கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் பெருமாள் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ