உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா பூஜைகள்

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா பூஜைகள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை, மஹா கணபதி ஹோமம், விஷ்ணு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, உச்சிகால பூஜை, தீபாராதனை, கூட்டு பிரார்த்தனை, பிராய சித்தம், மஹா சுதர்சன ஹோமம், ஹரிவராசனம் ஆகியவை நடந்தது.நேற்று, 2ம் நாளாக, கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம், தில ஹோமம், சாயுஜ்ய பூஜை எனப்படும், இறைவனோடு ஒன்றுபடும் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 8:00 மணிக்கு, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், வாஸ்து கலசாபிஷேகம், ஹரிவராசனம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 3ம் நாளான இன்று, சர்பதுரித சாந்தி, பிம்ப சுத்தி பூஜை, உச்சிகால பூஜையும், 4ம் நாளில், தத்துவ கலச பூஜை, தத்துவ ஹோமம், உப தேவதை கலச பூஜை, பிரம்ம கலச பூஜை ஆகியவையும், 5ம் நாள் காலை, 9:30 மணிக்கு, சிகஅக்ர மஹா கும்பாபி ஷேகமும், மாலை, யானை மீது ஐயப்ப சுவாமி திருவீதி உலாவும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி