உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சமரச மைய விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாவட்ட முதன்மை நீதிபதி லதா கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகில் நிறைவடைந்தது.நீதிமன்ற ஊழியர்கள், பையூர் தோட்டக்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சமரச மைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, எல்.இ.டி., வாகனம் மூலம் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ