தொடர்ந்து அதிகரித்து வரும் கே.ஆர்.பி., அணை நீர்வரத்து
கிருஷ்ணகிரி 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, இரு நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.கடந்த, 13ல் அணைக்கு நீர்வரத்து, 289 கன அடியாக இருந்தது. நேற்று முன்தினம், 430 கன அடியாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து, 548 கனஅடியாக மேலும் அதிகரித்துள்ளது. கடந்த, 9 முதல், 8 நாட்களாக தலா, 370 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 49.48 அடியாக நீர்மட்டம் இருந்தது.அதே போல், ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து, 40 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 11.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. சூளகிரி பாம்பாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர்திறப்பும் இல்லை. மொத்தம் உள்ள, 32.80 அடியில், 10.50 அடியாக நீர்மட்டம் உள்ளது. பாரூர் பெரிய ஏரிக்கு, 188 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து நீர்திறப்பு இல்லை. ஏரி மொத்த உயரமான, 15.60 அடியில் நேற்று, 13.90 அடியாக நீர்மட்டம் உள்ளது.