உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்துகிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழையின்றி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், இந்தாண்டில், 5வது முறையாக நீர்வரத்து முற்றிலும் நின்றது. இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 562 கன அடியாக இருந்த நீர்வரத்து, கடந்த, 3 நாட்களாக பரவலான மழையால், நேற்று, 1,011 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நேற்றுகே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 17 கன அடியாக நீர்வரத்தானது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் பாசனத்திற்காக, 178 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 47.40 அடியாக நீர்மட்டம் இருந்தது.பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் ஏரியிலிருந்து, 54 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர் திறப்பும் இல்லை. அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 13.90 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூளகிரி சின்னாறு அணை வறண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை