மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
21-Oct-2025
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 33; கூலித்தொழிலாளி. கடந்த, 29ல், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். மாலை, 6:45 மணிக்கு, சாமல்பட்டி அருகே, கல்லாவி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த, மகேந்திரா பிக்கப் வேன் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான, திருப்பத்துார் மாவட்டம், சேவத்துாரை சேர்ந்த வேன் டிரைவர் வினோத், 30, என்பவர் மீது வழக்குப்பதிந்து, சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Oct-2025