உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லட்சுமி நரசிம்ம சுவாமி சூரிய பிரபா வாகன உற்சவம்

லட்சுமி நரசிம்ம சுவாமி சூரிய பிரபா வாகன உற்சவம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், சூரிய பிரபா வாகன உற்சவம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 39ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், அன்னபக்ஷி வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சேஷ வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்றிரவு கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனத்தில் நரசிம்மர் வலம் வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம், பிரகார உற்சவம் ஆகியவை நடந்தது. பின், 9:00 மணிக்கு, சிறப்பு யாகம் நடத்தி, உற்சவருக்கு அலங்காரம் செய்து சூரிய பிரபா வாகன உற்சவம் நடந்தது. இது சின்னஏரிக்கரை, நேதாஜி சாலை, மீன் சந்தை, காந்தி சிலையை சுற்றிக்கொண்டு, நரசிம்ம சுவாமி கோவில் தெரு வழியாக கோவிலை அடைந்தது. இரவு சந்திரபிரபா வாகனத்திலும், இன்று (ஜூன் 12) புஷ்ப பல்லக்கு, 13ல் சயன உற்சவம், 14ல் சுப்ரபாத சேவை, 15 காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை, ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை