மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
04-Dec-2025
ஓசூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில், இம்மாதம், 1ம் தேதி முதல் இணையவழி பதிவேற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வக்கீல் சங்க தலைவர் சிவசங்கர் தலைமையில், 300 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், தேன்கனிக் கோட்டையில், வக்கீல் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையில், 60க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். வரும், 13ம் தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
04-Dec-2025