உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போதை பொருள் தடுப்பு, போக்சோ சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் முனைவர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றார். வழக்கறிஞர்கள் பெருமாள், பிரபாவதி, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, எஸ்.ஐ., மோகன் ஆகியோர் பேசினர்.கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெயந்தி, மாணவர்களுக்கு போதை பொருட்களின் தீமைகள், போக்சோ சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஆலோசனைகளை, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதில், உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ