உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களை தேடி உங்கள் ஊரில் மழையால் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

உங்களை தேடி உங்கள் ஊரில் மழையால் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

'உங்களை தேடி உங்கள் ஊரில்'மழையால் நிகழ்ச்சி ஒத்திவைப்புகிருஷ்ணகிரி, அக். 16-தொடர்மழையால், ஊத்தங்கரையில் இன்று (16ம் தேதி) நடக்கவிருந்த, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை வட்ட கிராமங்களில் இன்றும், நாளையும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் மழையால், இந்த கள ஆய்வு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. இம்முகாம் நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி