மண் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர் :கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், கெலமங்கலம் சாலை, பைரமங்கலம் அருகில் கடந்த 28ல், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வர்ஷா அளித்த புகார் படி, கெலமங்கலம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.