உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அனுமந்த-புரம் பஸ் ஸ்டாப் அருகே, தியானதுர்க்கம் வி.ஏ.ஓ., செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து, மாரண்டஹள்ளிக்கு, 2 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. அதனால், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, டிப்பர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !